Politics

பழுது பார்த்த சில நிமிடங்களில் நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த வாகனம்.

பழுது பார்த்த சில நிமிடங்களில் நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த வாகனம்.

பழுது பார்த்த சில நிமிடங்களில் நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த வாகனம்.
October 14, 2015 Canada

கனடா-ரொறொன்ரோ வடக்கில் வாகன விநியோகஸ்தரிடமிருந்து திருத்த வேலைக்கு கொடுத்த வாகனத்தை அவரது சகோதரருடன் செலுத்தி கொண்டிருந்த வேளையில் எஞ்சின் லைற் எரிய ஆரம்பித்து புகை வெளிவரத்தொடங்கியுள்ளது.
அச்சமயத்தில் வாகனம் நெடுஞ்சாலை 404ல் றிச்மன்ட்ஹில் பகுதியில் சென்றுகொண்டிருந்தது. புகையை கண்டதும் வாகனத்தை வீதியில் நெடுஞ்சாலை ஓரத்திற்கு எடுத்துள்ளார். வெளியே எடுத்த சிறிது நேரத்தில் வாகனம் எரிந்து சாம்பலாகியது.
பிரம்ரனை சேர்ந்த 26-வயதுடைய வாகன சொந்தகாரரான கிறிஸ்ரோபர் சகாடியோ உணர்ச்சி வேகத்துடன் நடுங்கியவாறு நான் கிட்டத்தட்ட இறந்து விட்டேன் என தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை பிற்பகல் அவரது 2011 அவ்டி Q5ஐ நியுமார்க்கெட்டில் உள்ள விநியோகஸ்தரிடமிருந்து எடுத்து கொண்டு வந்த போது சம்பவம் நடந்துள்ளது.
அதிகப்படியான எண்ணெய் நுகர்கின்றதென பல தடவைகள் முறைப்பாடு செய்த பின்னர் தொழில்நுட்பவியலாளர்கள் வாகனத்தின் எஞ்சின் பிஸ்ரன்களை மாற்றியுள்ளனர்.
வாகனத்தை திருத்திவிட்டோம் ஓடிச்செல்லும் வண்ணம் கூறினர் என கிறிஸ்ரோபர் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
இவரின் சதோதரர் மத்தியு பயணிகள் இருக்கையில் இருந்தார். அதிஷ்டவசமாக விபத்து நடந்த சமயம் தனது இரண்டு மகள்களும் வாகனத்தில் இருக்கவில்லை.

Latest News

EETTV was founded in 2009 and has rapidly grown into an online television channel. It is available online as well as through an IP cable box. It has reached positive feedback from the community as well as worldwide. EETTV offers 24 hours of Tamil entertainment for all ages.

Facebook

Copyright © 2015 EETTV.COM.

To Top