News

அகதி வாழ்விலும் தொடரும் ஈழத்துச் சொந்தங்களின் மனிதாபிமானம்: வெள்ள நிவாரணத்துக்கு உதவி

அகதி வாழ்விலும் தொடரும் ஈழத்துச் சொந்தங்களின் மனிதாபிமானம்: வெள்ள நிவாரணத்துக்கு உதவி

அகதி வாழ்விலும் தொடரும் ஈழத்துச் சொந்தங்களின் மனிதாபிமானம்: வெள்ள நிவாரணத்துக்கு உதவி
 புதன்கிழமை, 09 டிசெம்பர் 2015,

தமிழகத்தின் தலைநகர் சென்னையை புரட்டிப்போட்ட வெள்ளம் தொடர்பான நிவாரண நடவடிக்கைகளில் ஈழத்தமிழ் அகதிகளும் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

சென்னையில் பெய்த கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு, கன்னியாகுமரி மாவட்ட ஈழ அகதிகள் பணமும் நிவாரணப்பொருட்களும் வழங்கினர்.

கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரம், பழவிளை, ஞயுறான்விளை மற்றும் கோழிவிளை ஆகிய பகுதிகளில் ஈழ அகதிகள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர்.

இப்பகுதியை சார்ந்த ஈழ அகதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆண், பெண் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் விதம் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான ஆடைகள், போர்வைகள் மற்றும் 13,370 ரூபாய் காசோலை ஆகியவற்றை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் செயற்பட்டு வரும் வெள்ள நிவாரண பொது மையத்தில் வழங்கினர்.

தமிழகத்தில் அகதிகளாய் வாழ்ந்தாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானாக முன்வந்து உதவி செய்த ஈழ அகதிகளை அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டினர்.

Latest News

To Top
Skip to toolbar