Politics

எல்லை நிர்ணயம் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும்

எல்லை நிர்ணயம் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும்

எல்லை நிர்ணயம் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும்
எல்லை நிர்ணயம் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும்
எல்லை நிர்ணயங்கள் முறையான வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு – செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கல நாதன் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
‘திவிநெகும’ என்ற வேலைத்திட்டம் இன்னும் அதன் இலக்கை அடையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
இதேவேளை,வட கிழக்கில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 41 பெண்கள் எந்த வித வாழ்வாதார கொடுப்பனவுகளும் இன்றி வாழ்ந்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார்.
அத்தோடு,சமுர்த்திக் கொடுப்பனவுகளில் பெருந்தோட்ட மக்கள் அதிகளவில் உள்ளீர்க்கப்பட வேண்டும் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் கோரிக்கை விடுத்தார்.
மேலும், சமூக சேவைகளுக்காகக் குறைந்தளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றமையானது நாட்டின் வளர்ச்சிக்கான சுட்டியில் சிறந்த பெறுபேற்றைக் காட்டாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.

Latest News

To Top
Skip to toolbar