Politics

சிரிய ஜனாதிபதிக்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்கி இருப்பது அழிவை மேலும் மோசமாக்கும் : அமெரிக்கா

சிரிய ஜனாதிபதிக்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்கி இருப்பது அழிவை மேலும் மோசமாக்கும் : அமெரிக்கா

சிரிய ஜனாதிபதிக்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்கி இருப்பது அழிவை மேலும் மோசமாக்கும் : அமெரிக்கா

 

josh-earnest

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கெதிரான போரில் சிரிய ஜனாதிபதிக்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்கி இருப்பது, அழிவை மேலும் மோசமாக்கும் என அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஸ் எர்னஸ்ட் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் நிருபர்களிடையே கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது, அவர் மேலும் கூறுகையில்,

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கெதிரான போர் மிக நீண்ட சவாலான போர் என்பதை நாங்கள் அறிவோம். எனினும் எங்களின் கூட்டணி என்பது ஒற்றுமையானது, உறுதியானது. ஈராக், சிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் முக்கிய கேந்திரங்கள் மீது தாக்குதல் நடத்துகிறோம்.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கெதிராக தரை வழியாக போரிடும் உள்நாட்டு அரசுகளுக்கான எங்களின் ஆதரவை மேலும் அதிகரித்துள்ளோம்.

அமெரிக்காவும் அதன் 65 நட்பு நாடுகளும் ஐ.எஸ்.ஸின் பலத்தை ஒடுக்கி, அழிப்போம். சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்திய பிரித்தானியாவைப் பாராட்டுகிறோம். ரஷ்யாவின் தாக்குதல் நோக்கம் வேறாக இருக்கிறது.

அவர்கள் வேறு தரப்புக்கு ஆதரவாக இறங்கியுள்ளனர். சிரிய ஜனாதிபதிக்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்கி இருப்பது, அழிவை மேலும் மோசமாக்கும். என தெரிவித்துள்ளார்.

 

Latest News

To Top
Skip to toolbar