வடகொரியாவில் ஒரு குடும்ப ஆட்சி நடக்கிறது. 2011-ம் ஆண்டு கிம் ஜாங் இல் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அவரது மகனான தற்போதைய தலைவர் கிம் ஜாங் அன் பதவிக்கு வந்தார்.

அந்த நாட்டில் மனித உரிமை மீறல்கள் அரங்கேறி வருவதாக சர்வதேச அளவில் புகார்கள் எழுந்துள்ளன. நாஜிக்கள் காலத்தைப்போன்று அங்கு வன்கொடுமைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 10-ந் தேதி கூடுகிறது.

இதில் ஐ.நா. சபை மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டு, வடகொரியாவில் நடந்து வருகிற மனித உரிமை மீறல்கள் குறித்து எடுத்துரைப்பார்கள்.

அதன்பேரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விவாதம் நடத்தும்.

கடந்த ஆண்டும், இதேபோன்று வடகொரியாவின் மனித உரிமை மீறல்கள் பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூடி விவாதித்தது குறிப்பிடத்தக்கது.