Canada

கனடிய டொலர் அதிகரித்துள்ளது, லூனி உயர்கின்றது:

கனடிய டொலர் கடந்த இரண்டு வருடங்களில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது.

அண்மைக்கால கனடா வங்கியின் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டதை தொடரந்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஆறு வாரங்களில் லூனி கிட்டத்தட்ட 10சதவிகத்தால் அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை 80 சதமாக அதிகரித்துள்ளது.

எங்கள் நாணயத்தில் பெரிய ஏற்றத்தாழ்வுகள் இடம்பெற்ற போதிலும் இந்த ஏற்றத்தால் யார் நன்மை அடைவர் யார் தாக்கமடைவர் என்பது கேள்விக்குரிய விடயமாகும்.

வெற்றி பெறும் சிலர்:

சராசரி கனடியர்கள் வெளிப்படையாக வெற்றி பெறுவர்.இவர்களது பயண திட்டங்கள் மற்றும் யு.எஸ்சில் இவர்கள் என்ன வாங்குவர் என்பதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோரை போன்று யு.எஸ்.டொலர்களில் பொருட்கள் அல்லது சேவைகளை பெறும் கனடிய வணிகங்கள் இவைகளிற்கு குறைவான கட்டணம் செலுத்தலாம்.

உதாரணமாக தொழில் முறை விளையாட்டு அணிகள் ஒப்பந்த விளையாட்டு வீரர்களிற்கு யு.எஸ்.டொலர்களில் ஊதியத்தை வழங்குவர்.

லூனி பலமடைந்துள்ளதால் கனடிய டொலர் அதிகரித்து விளையாட்டு வீரர்களின் சம்பளமும்-யு.எஸ். டொலரில்-பின்புறம் பச்சை நிறம் கொண்ட- வழங்கப்படுவதால் அதிகரிக்கின்றதென கூறப்படுகின்றது.

நஷ்டமடையும் சிலர்:

நஷ்டமடைபவர்கள் அடிப்படையாக போட்டியிடுபவர்கள் அமெரிக்க தயாரிப்பாளர்கள் மட்டுமன்றி உலகின் இதர நாடுகளும் நஷ்டமடையும் என கருதப்படுகின்றது.

பலமடைந்துள்ள லூனி யு.எஸ்.டொலர்கள் குறிக்கப்பட்ட பொருட்களை வாங்கும் கனடிய வர்த்தகங்களிற்கு இலகுவாக அமையும்.

யு.எஸ்சில் முதலீடு செய்துள்ள கனடியர்கள், மதிப்பில் அவர்களது பெறுமதி அதிகரித்தாலும் குறைக்கப்பட்ட லாபங்களை எதிர்நோக்க வேண்டிய நிலைமைக்காளாவர் என கூறப்படுகின்றது.

ரியல் எஸ்டேட் அல்லது யு.எஸ்.பங்குகளில் முதலீடு செய்திருப்பவர்கள்-வெளியே தெரியாத வகையில்-தங்களை இடர்களில் இருந்து காத்து கொள்ளாவிடில் கனடிய டொலரின் ஏற்றத்தால் நஷ்டமடையலாம்.

யு.எஸ்.சார்பான நில விற்பனையாளர் தேசிய கூட்டமைப்பு ஒன்றின் அண்மைக்கால அறிக்கை, 2016 வசந்த காலத்திற்கும் 2017 வசந்த காலத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கனடியர்கள் யு.எஸ்சில் 19-மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளனரென தெரிவிக்கின்றது

Latest News

EETTV was founded in 2009 and has rapidly grown into an online television channel. It is available online as well as through an IP cable box. It has reached positive feedback from the community as well as worldwide. EETTV offers 24 hours of Tamil entertainment for all ages.

Facebook

Copyright © 2015 EETTV.COM.

To Top