Canada

ரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் துப்பாக்கிச் சூடு

ரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிம்கோ வீதி மற்றும் அடிலைய்ட் மேற்கு வீதி பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நேற்று இரவு 9 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது அங்கு ஆண் ஒருவர் எந்தவித அசைவும் அற்ற நிலையில் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்வதற்கு முன்னர் அவசர மருத்துவப் பிரிவினர் சம்பவ இடத்தில் அவருக்கு சில முதலுதவிகளை மேற்கொண்ட போதிலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் துப்பாக்கியுடன் சென்ற அவர் பழுப்பு அல்லது கறுப்பு நிற குளிர் அங்கி அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர் மற்றும் சந்தேக நபர் குறித்த மேலதிக விபரங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest News

EETTV was founded in 2009 and has rapidly grown into an online television channel. It is available online as well as through an IP cable box. It has reached positive feedback from the community as well as worldwide. EETTV offers 24 hours of Tamil entertainment for all ages.

Facebook

Copyright © 2015 EETTV.COM.

To Top