Jaffna

தடைகளையும் தாண்டி இடைக்கால அறிக்கை மீது இன்று ஆரம்பமாகின்றது விவாதம்! – குழப்பியடிப்பதில் மஹிந்த அணி .

புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சி உடனடியாகக் கைவிடப்படவேண்டும் என்று மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ள நிலையில், கடும் எதிர்ப்பலைகளையும் தாண்டி புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தை அரசு இன்று நடத்தவுள்ளது.

இதற்காக அரசமைப்பு நிர்ணய சபை இன்று காலை 10.30 மணிக்குக் கூடவுள்ளது.
இந்நிலையில், இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தைக் குழப்பியடிக்கும் வகையில் நாடாளுமன்றத்துக்குள்ளும், வெளியேயும் மஹிந்த அணியான பொது எதிரணி எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.

அரசமைப்பு நிர்ணய சபை கூடிய பின்னர், கறுப்புக்கொடி கட்டி இடைக்கால அறிக்கைக்கு பொது எதிரணி எம்.பிக்கள் எதிர்ப்பு வெளியிடவுள்ளனர்.

இன்றைய தினம் தொடக்கம் இடைக்கால அறிக்கை மீது மூன்று நாட்கள் விவாதம் நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது. காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த விவாதம் மாலை 6.30 மணிவரை தொடரும்.
அதேவேளை, நாடாளுமன்ற வளாகத்திலும், நாடாளுமன்றத்துக்குள்ளும் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Latest News

EETTV was founded in 2009 and has rapidly grown into an online television channel. It is available online as well as through an IP cable box. It has reached positive feedback from the community as well as worldwide. EETTV offers 24 hours of Tamil entertainment for all ages.

Facebook

Copyright © 2015 EETTV.COM.

To Top