News

முல்லைத்தீவில் தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் அனுட்டிப்பு!

தமிழீழ பெண்கள் எழுச்சிநாளும், 2ஆம் லெப் மாலதியின் 30ஆம் ஆண்டு நினைவு நாளும் இன்று முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் விடுதலைக்காக இன்றைய நாள் விடுதலைப்புலிகளின் மகளிரணியின் முதலாவது வித்தாக 2ஆம் லெப் மாலதி வீரமரணத்தைத் தழுவிக்கொண்டார்.

அவரின் நினைவு நாளான இன்று தமிழீழ பெண்கள் நாள் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் அனுட்டிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று புதுக்குடியிருப்புக் கைவேலியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பினால் இந்நிகழ்வு உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கைவேலி அமைப்பாளர் ராஜேஸ்வரி தலைமையில் இந்நிகழ்வு அனுட்டிக்கப்பட்டது.

2ஆம் லெப் மாலதியின் திருவுருவப்படத்துக்கு பொதுச்சுடரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் தி.கிந்துஜன் ஏற்றிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து கேப்பாபுலவு – முள்ளிவாய்க்கால் கைவேலி பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் சுடரேற்றினர்.

Latest News

EETTV was founded in 2009 and has rapidly grown into an online television channel. It is available online as well as through an IP cable box. It has reached positive feedback from the community as well as worldwide. EETTV offers 24 hours of Tamil entertainment for all ages.

Facebook

Copyright © 2015 EETTV.COM.

To Top