News

யாழில் தேசிய தமிழ் தின விழா; பிரதம விருந்தினராக ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.

தேசிய தமிழ் தின விழா எதிர்வரும் 14, 15 திகதிகளில் இடம்பெறவுள்ளதுடன் பாடசாலைகளின் கலாசார விழாவும் இத்தினங்களில் பிரமாண்டமாக யாழ்.இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் (14) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள். யாழ்.மத்திய கல்லூரியில் இருந்து யாழ்.இந்துக் கல்லூரி வரையில் பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் 9 மாகாணங்களினதும் ஆளுநர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர்களால் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தமிழ் தின போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களை வழங்குவார். தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் கலாசார நிகழ்வுகள் மற்றும் கலை நிகழ்வுகள் மாலை 7 மணி வரையில் நடைபெறும்.

இதனோடு தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் சுகி சிவம் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் நடைபெறும்.

Latest News

EETTV was founded in 2009 and has rapidly grown into an online television channel. It is available online as well as through an IP cable box. It has reached positive feedback from the community as well as worldwide. EETTV offers 24 hours of Tamil entertainment for all ages.

Facebook

Copyright © 2015 EETTV.COM.

To Top