Business

9 சதவீதமாக குறைப்பு: சிறு வியாபாரங்களுக்கான வரி : ஜஸ்டின் ட்ரூடோ

சிறு வியாபாரங்களுக்கான வரியினை எதிர்வரும் 2019ஆம் ஆண்டிலிருந்து 9 சதவீதமாக குறைக்கவுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மேலும் கூறுகையில், “இதேவேளை வழக்கமான வருமானத்தினை வாழ்நாள் முதலீடாக மாற்றியமைப்பதற்கு வழிவகுக்கும் முறைகளில் தாம் மாற்றங்களை ஏற்படுத்தப்போவதில்லை.
தற்போது அறிவிக்கப்படும் இந்த வரிக் குறைப்பானது. வர்த்தகர்களுக்கு ஆண்டுக்கு 7,500 டொலர்கள் வரையிலான மேலதிக வருமானத்தினைப் பெற்றுக் கொள்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
கனடாவின் சிறிய வியாபராரிகளுக்கு வழங்கப்படும் இந்த வரிக் குறைப்பானது, அவர்களின் கடுமையான உழைப்பின் மூலம் ஈட்டப்படும் வருமானத்தில் அதிக பகுதியை தங்களுக்காக வைத்துக் கொள்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது.
இந்த தொகையினை அவர்கள் மீண்டும் தமது வர்த்தகத்தில், தமது தொழிலாளர்களில் அல்லது சமூகத்தில் முதலிட முடியும்” என கூறினார். தற்போது சிறிய வர்த்தகங்களுக்கான வரியின் அளவு 10.5 சதவீதமாக உள்ளதுடன், முதல் ஐந்து இலட்சம் டொலர்களுக்கு உட்பட்ட வருமானத்திற்கு இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

EETTV was founded in 2009 and has rapidly grown into an online television channel. It is available online as well as through an IP cable box. It has reached positive feedback from the community as well as worldwide. EETTV offers 24 hours of Tamil entertainment for all ages.

Facebook

Copyright © 2015 EETTV.COM.

To Top