Business

9 போர் கப்­பல்கள் ஆறு நாடு­களின் இருந்து இலங்கை வருகிறது .!

அடுத்த மாதம் நடுப்­ப­குதி வரை­யி­லான காலப்­ப­கு­தியில் ஆறு நாடு­களின் ஒன்­பது போர்க் கப்­பல்கள் இலங்­கைக்கு வரு­கின்­றன. இந்த விஜ­யங்­க­ளின்­போது இலங்கை கடற்­ப­டை­யுடன் பல்­வேறு கூட்டு ஆயு­தப்­ப­யிற்­சி­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

கடந்த காலங்­களில் தொடர்ச்­சி­யாக சர்­வ­தேச நாடு­களின் போர்க்­கப்­பல்கள் இலங்கை நோக்கி விஜயம் மேற்­கொண்­டி­ருந்த நிலையில் அண்­மைக்­கா­ல­மாக இலங்கை நோக்­கிய எந்த விஜ­யமும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

எனினும் அடுத்த மாதம் பத்தாம் திகதி வரை­யி­லான காலப்­ப­டு­தியில் ஆறு நாடு­களை சேர்ந்த ஒன்­பது போர்க்­கப்­பல்கள் இலங்­கைக்கு வரு­கின்­றன. அதன் அடிப்­ப­டையில் இந்­தோ­னே­சிய கடற்­ப­டையின் போர்க்­கப்பல் இன்று இலங்­கையை வந்­த­டையும் நிலையில் எதிர்­வரும் 23ஆம் திகதி பங்­க­ளாதேஷ் கடற்­ப­டையின் போர்க்­கப்பல் ஒன்றும் 26ஆம் திகதி தென்­கொ­ரி­யாவின் இரண்டு போர்க்­கப்­பல்­களும் இலங்கை வரும்.

நவம்பர் மாதம் 2ஆம் திகதி இந்­தி­யாவின் இரண்டு போர்க்­கப்­பல்­களும், நவம்பர் மாதம் 4ஆம் திகதி இந்­தோ­னே­சி­யாவின் போர்க்­கப்பல் ஒன்றும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி பாகிஸ்தான் போர்க்­கப்பல் ஒன்றும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி சீன போர்க்­கப்பல் ஒன்றும் இலங்­கைக்கு விஜயம் செய்­கின்­றன.

குறித்த கப்­பல்கள் வெவ்­வேறு காலத்தில் விஜயம் செய்­கின்ற நிலையில் இலங்­கையில் நங்­கூ­ர­மி­டப்­பட்­டுள்ள காலப்­ப­கு­தியில் இலங்கை கடற்படையுடன் இணைந்து கூட்டு ஆயுத பயிற்சிகளையும் முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

Latest News

EETTV was founded in 2009 and has rapidly grown into an online television channel. It is available online as well as through an IP cable box. It has reached positive feedback from the community as well as worldwide. EETTV offers 24 hours of Tamil entertainment for all ages.

Facebook

Copyright © 2015 EETTV.COM.

To Top