Jaffna

காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் 300 ஆவது நாளை எட்டியது.

தாயகத்தில் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் இடம்பெற்று வரும் போராட்டம் இன்று 300 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் கவனயீர்ப்பு ஊர்வலம் இடம்பெற்றது.

வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அங்கிருந்து கடை வீதி வழியாக தாம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற கண்டி வீதியில் அமைந்துள்ள பிராதான தபாலகத்திற்கு அருகாமையில் வந்தடைந்திருந்தனர்.

சுமார் 50 பேர் வரையில் கலந்துகொண்ட இப்போராட்டத்தின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தாம் அரசாங்கத்தினை நம்பி ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் சர்வதேசமே தமக்கான தீர்வை பெற்றுத்தரவேண்டுமு; எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Latest News

EETTV was founded in 2009 and has rapidly grown into an online television channel. It is available online as well as through an IP cable box. It has reached positive feedback from the community as well as worldwide. EETTV offers 24 hours of Tamil entertainment for all ages.

Facebook

Copyright © 2015 EETTV.COM.

To Top