News

கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் ரெலோ! – நள்ளிரவில் பரபரப்பான முடிவு

உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப் பங்கீடு தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களில், சுமுகமான முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில், இலங்கை தமிழரசு கட்சியுடன் இணைந்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ரெலோ இன்று அதிகாலை அறிவித்துள்ளது.

நேற்று இரவு 10 மணி தொடக்கம் இன்று அதிகாலை 01.15 மணி வரையில் வவுனியாவில் உள்ள ரெலோ தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரெலோவின் செயலாளர் சிறிகாந்தா கருத்து தெரிவிக்கையில், “கடந்த வாரம் 3 நாட்கள் இலங்கை தமிழரசு கட்சியுடன் தேர்தல் பங்கீடு தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தமிழரசு கட்சி மிக கடுமையானதும், பிடிவாதமானதும், விட்டுக்கொடுக்க முடியாததுமான நிலைப்பாட்டை எடுத்திருந்தது.

இதன் காரணமாக வேறு வழியின்றி தமிழரசு கட்சியுடன் இணைந்து போட்டியிடப்போவதில்லை என்ற முடிவுக்கு ரெலோ வந்துள்ளது. இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கட்சி தலைமைக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், கூட்டமைப்பில் இருந்து ரெலோ வெளியேறிமையானது முன் கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு விடயம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள உறுதி மொழிக்கு அமைவாகவே ரெலோ கூட்டமைப்பில் இருந்து வெளியேறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest News

EETTV was founded in 2009 and has rapidly grown into an online television channel. It is available online as well as through an IP cable box. It has reached positive feedback from the community as well as worldwide. EETTV offers 24 hours of Tamil entertainment for all ages.

Facebook

Copyright © 2015 EETTV.COM.

To Top