Canada

கனடிய நெடுஞ்சாலை ஸ்காபுரோவில் கொடூரமான விபத்தில் இருவர் மரணம்!

எஸ்யுவி வாகனம் ஒன்று நெடுஞ்சாலை 401-கிழக்கு பாதை ஸ்காபுரோவில் இன்று அதிகாலை கம்பம் ஒன்றுடன் மோதியதில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவம் வார்டன் அவெனியுவிற்கு அருகாமையில் அதிகாலை 4மணிக்கு சிறிது பின்னர் நடந்துள்ளது.

வாகனத்தின் சாரதி கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் வானில் தூக்கி எறியப்பட்டு பின்னர் கம்பம் ஒன்றுடன் சுற்றப்பட்டதாக தோன்றுகின்றதென மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திலேயே இருவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேறு காயங்கள் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை. இறந்தவர்கள் குறித்த விபரங்கள் அடையாளங்கள் தெரியவில்லை எனவும் இது குறித்து தாங்கள் முயன்று வருவதாகவும் கான்ஸ்டபிள் பிராஷ் நிரஞ்சன் நிருபர்களிடம் தெரிவித்தார்வே கம் மற்றும் வானிலை விபத்திற்கு காரணமா என்பது குறித்து அறிய முயல்வதாகவும் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

மோதலிற்கு முன்னர் என்ன நடந்திருக்கும் என்பதை வாகனத்தின் கணனி அமைப்பு பதிவிறக்கம் செய்யப்படுமெனவும் இவர் தெரிவித்துள்ளார். வாடன் அவெனியுவில் கிழக்கு கலெக்டர் பாதைகள் தற்சமயம் திறக்கப்பட்டுள்ளன. பாதைகள் குறிப்பிட்ட பகுதியில் தாமதத்திற்குள்ளாகின. பிரத்தியேக இயந்திரங்கள் சம்பவ இடத்தில் காணப்படுகின்றன. கம்பத்தில் இருந்து வாகனத்தை வெளியே எடுக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதன் பின்னரே வாகனத்திற்குள் அகப்பட்டுள்ள இறந்தவர்களை வெளியே எடுக்க முடியும் என தெரிவித்ததுடன் முடியாவிடின் வாகனம் தடயவியல் அறிவியல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பாதிக்கப்பட்டவர்களை வெளியே எடுக்க அவர்கள் முயல்வர் எனவும் தெரிவித்தார். சாட்சியங்களின் உதவியை பொலிசார் நாடுகின்றனர்.

Latest News

To Top
Skip to toolbar