India

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா இன்று ஆஜர்

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா இன்று நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஆஜராகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த செப்டம்பர் 25ம் தேதி விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஆணையத்தில் திமுக மருத்துவர் அணி நிர்வாகி சரவணன், ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவருடைய கணவர் மாதவன் உட்பட 28 பேர் பிரமாணபத்திரம் தாக்கல் செய்தனர். 422 பேர் புகார் மனு அளித்தனர்.

இந்த ஆணையத்தில் கடந்த நவம்பர் 22ம் தேதி முதல் இதுவரை 17 பேரிடம் நீதிபதி விசாரணை நடத்தியுள்ளார். இதில், திமுக மருத்துவர் சரவணன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபக், தீபா, டாக்டர் பாலாஜி உட்பட ஒரு சிலர் நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பல்ேவறு தகவல்களை ஆணையம் திரட்டியுள்ளது. இந்த ஆணையத்தின் விசாரணை சூடுபிடித்து வந்த நிலையில், கடந்த 20ம் தேதி டிடிவி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், ஜெயலலிதா மருத்துவமனையில் பழச்சாறு குடிப்பது போன்று 20 நொடி ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டார். இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விசாரணை ஆணையம் மூலம் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் வீடியோ வெளியிட்டது குறித்து அண்wணாசதுக்கம் போலீஸ் நிலையத்தில் விசாரணை ஆணைய செயலாளர் பன்னீர்செல்வம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அண்ணா சதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் விசாரணை ஆணையம் தரப்பில் வீடியோ ஆதாரத்தை ஓப்டைக்கும் படி வெற்றிவேலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த திங்கள் கிழமை வெற்றிவேல் வழக்கறிஞர் வீடியோவை ஒப்படைத்தார். இந்த நிலையில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா சில நாட்களுக்கு முன் ஊடகங்களுக்கு ேபட்டி அளித்திருந்தார்.

அப்போது ஜெயலலிதா தொடர்பான மேலும் பல வீடியோ ஆதாரம் இருப்பதாகவும், சசிகலா தன்னிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இதை தொடர்ந்து விசாரணை ஆணையம் கிருஷ்ணபிரியாவை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது. அதன்பேரில் கிருஷ்ணபிரியா இன்று காலை 10 மணியளவில் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் ஆஜராகிறார். அப்போது, ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ குறித்து பல்வேறு கேள்விகள் கேட்க ஆணையம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஜனவரி 3ம் தேதி (நாளை) எம்எம்சி உடற்கூறுயியல் துறை தலைவர் சுதா சேஷையன், ஜனவரி 4ம்தேதி அப்போலோ டாக்டர் சத்யபாமா ஆகியோர் நேரில் ஆஜராகின்றனர். மேலும் அரசு டாக்டர் பாலாஜி வரும் 5ம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி சம்மன் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

To Top
Skip to toolbar