News

ரணில் நாட­க­மா­டு­கிறார் : செல்கிறார் மஹிந்த

எனது ஆட்­சிக்­கா­லத்தில் மத்­திய வங்­கியில் ஊழல் இடம்­பெற்­றதா என ஆராய வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளதே தவிர, நான் குற்­ற­வாளி என அறிக்­கையில் எந்­த­வொரு இடத்­திலும் சுட்­டிக்­காட்­டப்­ப­ட­வில்லை. சந்­தேகம் இருக்கும் பட்­சத்தில் விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­குவேன் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார்.

மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் விவ­கா­ரத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவும் பதி­ல­ளிக்க வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ள நிலை யில் அது குறித்து கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மஹிந்த ராஜபக் ஷ எம்.பி இதனைக் குறிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்.

மத்­திய வங்கி பிணை­முறி குறித்து ஆராயும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு தயா­ரித்­துள்ள அறிக்­கையில் எந்­த­வொரு இடத்­திலும் எனது பெயர் சுட்­டிக்­காட்­டப்­ப­ட­வில்லை. நான் மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் தொடர்­பு­பட்­டுள்ளேன் என சுட்­டிக்­காட்­டப்­ப­ட­வு­மில்லை. எனினும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பெயர் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

அவர் மத்­திய வங்கி விவ­கா­ரத்தில் தவ­றாக தீர்­மானம் எடுத்­துள்ளார் என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அவ்­வாறு இருக்­கையில் குறித்த குற்­றச்­சாட்டு குறித்து பொறுப்­புக்­கூற வேண்டும். தான் குற்­ற­வாளி இல்­லை­யெனின் அதனை அவர் நிரு­பிக்க வேண்டும்.அதற்­காக அவர் கடந்த பாரா­ளு­மன்ற அமர்வில் உரை நிகழ்த்­தினார். சிறு­வர்கள் விளை­யா­டு­வதை போல அவர் பாரா­ளு­மன்­றத்தில் கூச்­ச­லிட்டு தனது உரை­யினை நிகழ்த்­தினார்.

என்­மீது குற்றம் சுமத்­தப்­பட்டு நான் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்டு குறித்த கார­ணிகள் வின­வப்­பட்டால் அன்று நானும் பாரா­ளு­மன்­றத்தில் எனது நிலைப்­பாட்டை தெரி­விப்பேன். 2008- 2014 ஆண்டு காலப்­ப­கு­தியில் எனது ஆட்­சியில் ஊழல் இடம்­பெற்­றது என்றால் அது குறித்து விசா­ர­ணை­களை நடத்­தப்­பட்டு கண்­ட­றி­யப்­பட வேண்டும். உண்­மைகள் ஆதா­ரங்­க­ளுடன் நிரு­பிக்­கப்­பட வேண்டும். ஒரு­சிலர் கூறும் பழிக்கு நான் எத­னையும் தெரி­விக்க வேண்டும் என்ற அவ­சியம் இல்லை. ரணில் விக்­க­ர­ம­சிங்க என்ற நபரின் பெயர் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. ஆகவே அவர் கருத்­துக்­களை முன்­வைக்க வேண்டும். எனினும் எனக்கு அவ்­வா­றான தேவை ஒன்று இல்லை. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது அர­சியல் தேவைக்­காக தன்னை காப்­பற்­றிக்­கொள்ள நாட­க­மாடி வரு­கின்றார். நான் குற்­ற­வாளி என்­பதை உறு­திப்­ப­டுத்த அவர்­க­ளுக்கு முடி­ய­வில்லை என்­பதால் பொய்­யான குற்­றங்­களை சுமத்தி என்­னையும் குற்­ற­வா­ளி­யாக்க முயற்­சித்து வரு­கின்­றனர்.

எனது ஆட்சிக் காலத்தில் மத்­திய வங்­கியில் ஊழல் இடம்­பெற்­றுள்­ளதா என்­பது குறித்து ஆராய வேண்டும் என்றே கூறப்­பட்­டுள்­ளது. மாறாக நான் திரு­டினேன் என கூற­வில்லை. பிர­தமர் கூறிய கார­ணங்கள் அறிக்­கையில் இல்லை. இரண்­டையும் தொடர்­பு­ப­டுத்தி என்­னையும் குற்­ற­வா­ளி­யாக சித்­த­ரிக்க முயற்­சிக்­கின்­றனர். என்­மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றங்கள் குறித்து ஆராய நான் பூர­ண­மாக அனு­மதி வழங்­கு­கின்றேன்.

எனது அதி­கா­ரிகள் மீதும் விசா­ரணை நடத்த அனு­மதி வழங்­கு­கின்றேன். ஏனெனில் எனது அதி­கா­ரிகள் மீது எனக்கு பூரண நம்­பிக்கை உள்­ளது. மேலும் பார­ளு­மன்­றத்தில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த நாம் முயற்­சிக்­க­வில்லை. அர­சாங்­கத்தில் இருந்­து­கொண்டு இவர்கள் நடந்­து­கொள்ளும் விதம் மிகவும் மோசமானது. எமது அணியின் சிரேஷ்ட உறுப்பினர் மீது அவர்களின் இளம் உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தினர். இது தந்தைக்கு மகன் தாக்குதல் நடத்துவதற்கு ஒப்பான செயலாகும். ஆகவே ஐக்கிய தேசியக் கட்சி இது குறித்து கவனம் செலுத்த வேண்டும். என்றாலும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்றார்.

Latest News

EETTV was founded in 2009 and has rapidly grown into an online television channel. It is available online as well as through an IP cable box. It has reached positive feedback from the community as well as worldwide. EETTV offers 24 hours of Tamil entertainment for all ages.

Facebook

Copyright © 2015 EETTV.COM.

To Top