Canada

கார்பன் மொனொக்சைட் கசிவினால் 12வயது சிறுவன் மரணம்!

அல்பேர்ட்டா–கல்கரி வடக்கில் அமைந்துள்ள தொடர்மாடி கட்டிடமொன்றில் ஏற்பட்ட அபாயகரமான கார்பன் மொனொக்சைட் கசிவினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது. இந்த இளம் சிறுவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுகிழமை பிற்பகல் 5-மணியளவில் நடந்துள்ளது. இவனது குடும்பத்தை சேர்ந்த மற்றய இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட தொடர்மாடிக்கட்டிடத்தின் ஆறு யுனிட்டை சேர்ந்தவர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டனரெனவும் புலன்விசாரனை காரணமாக குடியிருப்புக்களிற்கு திரும்ப அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

Latest News

To Top
Skip to toolbar