Canada

கனடாவின் வங்கி தகவல்களை தன்னுடைய ஆண் நண்பருக்கு ரகசியமாக கசிய விட்ட பெண் விரைவில் நாடு கடத்தப்படவுள்ளார்.

கனடாவின் Calgary நகரில் வங்கி ஒன்றில் பணிபுரிகிறார் Kenza Belakziz(24), அவர் தனது ஆண் நண்பரான Nasery என்பவர் வங்கியைக் கொள்ளையடிப்பதற்கு வசதியாக வங்கியின் வரைபடம், அலாரத்தை அமைதியாக்குதல், பணம் எங்கே வைக்கப்படும் என்னும் தகவல் போன்ற விடயங்களை அவருக்கு அளித்திருக்கிறார்.

திட்டத்திற்கேற்ப அவரது ஆண் நண்பரும் அவரது இரண்டு நண்பர்களும் வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி வங்கியைக் கொள்ளையடித்தனர். ஆனால் அதற்குள் பொலிசார் வங்கியை சுற்றி வளைத்து விடவே சில நிமிடங்களுக்குள் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது ஒரு உள்வேலையாக இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் Kenzaவைக் கைது செய்தனர், அவரும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். வழக்கறிஞர்கள் அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று வாதாடினர். ஏனென்றால் ஆறு மாதங்களுக்குமேல் ஒருவர் சிறைத்தண்டனை அனுபவித்தால் அவர் குடியுரிமை பெற முடியாது. அவர் தனது சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. இதைப் புரிந்து கொண்ட நீதிபதி “நீங்கள் கோரும் தண்டனை, குற்றவாளி புலம்பெயர்வதற்கு எந்தப் பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்கிற நோக்கத்திலேயே உள்ளதாக எனக்குத் தோன்றுகிறது. நான் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல” என்று கூறினார்.

அவரை நாடு கடத்துவதற்காக வருத்தப்படுவதனால் அதே குற்றத்தை செய்த மற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையைவிட அவருக்கு குறைந்த தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது என்று கூறிய நீதிபதி, வழக்கறிஞர்களின் ஆறு மாத தண்டனைக் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.

இதையடுத்து Kenza தான் குற்றத்தை ஒப்புக்கொண்டதிலிருந்து பின்வாங்க முயற்சி செய்தார். இதற்கும் சம்மதிக்காத நீதிபதி விசாரணையை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார். Kenzaவுக்கு ஆறு மாதங்களுக்குமேல் சிறைத்தண்டனை விதிக்கப்படுமானால் அவர் நாடு கடத்தப்படப்போவது உறுதி.

தனது நண்பருக்கு உதவப்போய் தற்போது குடும்பத்தை கனடாவில் விட்டு விட்டு Moroccoவுக்கு நாடு கடத்தப்படும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார் Kenza.
Kenzaவின் குடும்பத்தார் அனைவரும் ஏற்கனவே கனடா குடியுரிமை பெற்று கனடாவில் வாழ்கின்றனர் என்பதும் Kenzaவுக்கு Moroccoவில் தற்போது யாருமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest News

To Top
Skip to toolbar