News

மக்களின் போராட்டத்துக்கு பொறுப்பு கூறுவார்களா சம்பந்தனும் விக்னேஸ்வரனும்? மக்களின் கோரிக்கை.

104 குடும்பங்களுக்கு சொந்தமான 181 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் வரை தமது போராட்டம் தொடருமென தெரிவித்த கேப்பாப்புலவு மக்கள் இன்று தமிழ்மக்கள் பிரதிநிதிகளிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். இராணுவத்தினர் சுபீகரித்துள்ள தமது காணிகளை மீள கையளிக்குமாறு கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த கேப்பாப்புலவு நிலமீட்பு போராட்டம் 414 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்புலவு மக்கள் எமது பூர்வீக வாழ்விட போராட்டத்தின் முடிவு என்ன? என்ற கேள்வி அடங்கிய மகஜர் ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ஆண்டியையா புவனேஸ்வரனிடம் இன்று கையளித்துள்ளனர்.

மேலும் எமது பூர்வீக வாழ்விடம் எமக்கு வேண்டும் என்ற தளராத மன உறுதியுடன் 414 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் கால் பதித்து நிற்கும் எமது போராட்டத்திற்கு பதில் கூறவேண்டும் என்று கோரிக்கையை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் வி விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ்மக்கள் பிரதிநிதிகளிடம் முன்வைத்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

Latest News

To Top
Skip to toolbar