News

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு அழைப்பு .

மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள பன்குடாவெளி வாவிக் கரையோரத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது. இது குறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள பொது அறிவித்தலில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

“தமிழ் உணர்வாளரே” என்று விழித்து எழுதப்பட்டுள்ள அந்த அழைப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மிகவும் உணர்வு பூர்வமான முறையில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் இரவு 6.30 வரை நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதில், இரத்ததானம், அன்னதானம், ஆத்ம சாந்திப் பூஜை, உணர்வுபூர்வமாக ஆயிரம் சுடர்கள் ஏற்றி வைத்தல் என்பனவும் இடம்பெறவுள்ளதாக அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒரு குறுகிய எல்லைக்குள் நடத்தியதாகவும், ஆனால் இந்த வருடம் பரந்தளவில் இரண்டு நாட்கள் அனுஷ்டிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest News

To Top
Skip to toolbar