News

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் – அழைப்பு விடுத்துள்ள வடக்கு முதலமைச்சர் .

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அனைவரும் ஒன்றிணைந்து பங்கேற்க முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாதவர்கள் எத் தேசத்தில் இருப்பினும் நினைவேந்தல் நடைபெறும் மே 18 காலை 11 மணியிலிருந்து இரண்டு நிமிடங்களுக்கு மௌன வணக்கம் அனுஷ்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முரண்பட்டு நின்றவர்களும் ஒன்றிணைந்து உயிரிழந்தோருக்கு அஞ்சலிக்கவும் உறவுகளை இழந்தோருக்கு தோற்றுதலையும் ஆறுதலையும் வழங்க முன்வந்துள்ளார்கள். இதனடிப்படையில் தமிழ் மக்கள் எங்கிருப்பினும் 2018 மே 18 அன்று நினைவேந்தல்களுக்காய் ஒன்றிணையுங்கள். வணிக சகோதர சகோதரிகள் அன்றைய நாளில் நண்பகல் 12 மணிவரை துக்க நாளாக கடைப்பிடித்து கடைகளைப் பூட்டி ஒத்துளைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அறிவித்துள்ளார்.

Latest News

To Top
Skip to toolbar