News

அதிபரை முழந்தாளிட வைத்த முதலமைச்சருக்கு எதிராக பேரணி!

பதுளை மகளிர் வித்தியாலயத்தின் பெண் அதிபரை முழந்தாழிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவத்தைக் கண்டித்து பதுளையில் பெரும் ஆர்ப்பாட்ட இடம்பெற்றது. பதுளை மகளிர் வித்தியாலயத்திற்கு முன்னால் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், பேரணியாக பதுளை நகரை சென்றடைந்தது.

ஏதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பதுளை மகளிர் வித்தியாலயத்தின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் உட்படபெருந்தொகையானவர்கள் கலந்துகொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவையும் சில அதிகாரிகளையும் பதவி விலக்கி அவர்களை கைதுசெய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுள்ளோர் ஆளுநருக்கு மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு ஊவா மாகாண சபைக்கு முன்னால் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top