India

அதிமுகவை கபளீகரம் செய்ய தினகரன் நினைக்கிறார்: ஓ. பன்னீர் செல்வம் பேச்சு

சென்னை: அதிமுகவை கபளீகரம் செய்ய டிடிவி தினகரன் நினைக்கிறார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கநாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், ‘தினகரன் பற்றி எனக்கு தெரியும். அந்த குடும்பத்தின் இரும்பு பிடியில் கட்சியும் ஆட்சியும் செல்லகூடாது என்பதற்காக இணைந்து செயலாற்றி கொண்டிருக்கிறோம். 234 தொகுதிகளிலும் மக்கள் நம் பக்கம் உள்ளனர் என்பதை மாவட்டம் தோறும் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பார்த்திருப்பார்கள்.

எதையோ எதிர்பார்த்து சிலர் டிடிவி பக்கம் சென்றிருக்கின்றனர். அவர்களை நம்ப கட்சியினர் தயராயில்லை. வரம்பு மீறிய அதிகாரத்தால் கடந்த காலத்தில் அதிகாராத்தின் எல்லைக்கே சென்றவர்கள். இந்த கட்சியை கபளீகரம் செய்ய தினகரன் நினைக்கிறார். அதிமுக தூய தொண்டர்கள் இருக்கும் வரை அது நடக்காது’ என்றார். கூட்டத்தில் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், மாணவரணி செயலாளர் சாந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top