News

அமெரிக்காவில் சரமாரி துப்பாக்கிச் சூடு..பெண்ணை காப்பாற்றிய பொலிசார் : 5 பேர் பலி

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் Pennsylvania பகுதியில் உள்ள Fayette County-இன் Melcrof-ல் இருக்கும் கார் கழுவும் கடை ஒன்றில், இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 02.45 மணி அளவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகியுள்ளனர். ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து அங்கிருக்கும் நபர் ஒருவர் கூறுகையில், திடீரென்று துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும், அது சுமார் 30 முறை கேட்டதாகவும் கூறியுள்ளார். பின் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போது, அங்கு விரைந்த வந்த பொலிசார் அங்கிருந்த டிரக் வாகனத்தில் சிக்கியிருந்த பெண்ணை மீட்டுக் கொண்டிருந்தனர். அதற்கு பக்கத்தில் Toyota டிரக் மற்றும் Dodge கார் போன்றவைகள் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் என்ன காரணத்திற்காக நடந்தது என்பது குறித்து தெரியவில்லை எனவும், 5 பேர் இறந்ததில் 3 ஆண்கள் 2 பெண்கள் எனவும் அவர்களுக்கு 20 முதல் 30 வயது இருக்கும் என்றும் அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறித்து எந்த ஒரு தகவலும் தெரியவில்லை என பொலிசார் கூறியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top