News

அமெரிக்காவில் தமிழர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்

தமிழர் பண்டிகையான பொங்கல் திருநாள், அமெரிக்காவின் வெர்ஜீனியா சட்டசபையில் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மக்கள் வசித்து வருகின்றனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு அங்கு விடுமுறை இல்லை. எனவே, தமிழக சிறுவர்கள் பள்ளி செல்லாமல், வீட்டிலேயே பொங்கல் பண்டிகையை இதுவரை கொண்டாடி வந்தனர்.

இந்தியர்கள் அவரவர் கலாச்சாரங்கள், நம்பிக்கைகளை பின்பற்ற அமெரிக்காவில் அங்கீகாரம் உண்டு. இந்நிலையில், தமிழர் பண்டிகையை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என வள்ளுவன் தமிழ் அகாடமி என்ற அமைப்பு கடுமையாக போராடியது. அதன் விளைவாக, கடந்த பிப்ரவரி 2017யில் பொங்கல் பண்டிகையை அங்கீகரித்து, வெர்ஜீனியா மாகாண சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், அத்தீர்மானம் தற்போது சட்டமாக மாறியுள்ளது. இதன் காரணமாக, வெர்ஜீனியாவில் இனி வரவிருக்கும் அனைத்து பொங்கல் பண்டிகைக்கும் விடுமுறை அளிக்கப்படும். இந்த சட்டத்திற்கு சபையில் இருந்த எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே, இது தமிழர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

Latest News

To Top