அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்ற கோத்தா!

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு நேரடி தொடர்பு உள்ளது. ஆனால், கோத்தபாய தொடர்புபட்டிருந்த அறிக்கை அரசியல் அழுத்தங்களுக்கு அமைய நீதிமன்றின் பார்வைக்கு அனுப்பாமல் மறைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த கொலை தொடர்பில் விசாரணை மேற்கொண்டு, ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையினை, குற்ற விசாரணை திணைக்களம் உட்பட பல நிறுவனங்களினால் ஆராய்ந்த பின்னர் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமானவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் நீதிமன்ற அமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டது.அறிக்கை ஒப்படைத்து இரண்டு வருடங்களுக்கு அதிக காலம் கடந்துள்ளது. எனினும் இது தொடர்பில் நீதிமன்ற செயற்பாடுகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
வெலிக்கடை கைதிகள் 27 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் கோத்தபாயவுக்கு நேரடி தொடர்புள்ளமை சாட்சியங்களுடன் உறுதி செய்யப்பட்டன. எனினும் நடவடிக்கை எடுக்காமல் விடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்ச தற்போது அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றுள்ளார்.
அவர் கைது செய்யப்படுவதனை தடுப்பதற்காக நாட்டை விட்டு செல்லுமாறு கோத்தபாயவுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதாக மேல் மாகாண சபை முதலமைச்சர் இசுர தேவபிரிய அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.