அரசியல் கைதிகள் உறவினர்கள் முதலமைச்சரிடம் அவசர கோரிக்கை!

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, ஏனைய கைதிகளிடம் இருந்து விலக்கி வைக்க வேண்டும் எனவும் இப்பிரச்சினையை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும் எனவும் கோரி அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இன்று மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
முதலமைச்சரின் அலுவலகத்தில் முதலமைச்சரைச் சந்தித்த அரசியல் கைதிகளின் உறவினர்கள் குறித்த மகஜரை கையளித்தனர். இதன்போது, அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்வதாக முதலமைச்சர் அரசியல் கைதிகளின் உறவினர்களிடம் தெரிவித்தார். அதேவேளை, மருத்துவ தேவையுடைய அரசியல் கைதியின் மருத்துவ தேவையினை நிறைவு செய்வதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தி, முதலமைச்சரிடம் அரசியல் கைதியின் உறவினர்கள் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.