ஆறு வயது சிறுமியை நாய் கடித்ததால் 125 தையல்கள் தேவைப்பட்டன!

கனடா-ஆறு வயது சிறுமி ஒருத்தியை நாய் ஒன்று படு மோசமாக தாக்கி கடித்ததால் கிட்டத்தட்ட கண் ஒன்றை இழக்க வேண்டிய நிலைமைக்கு அவள் ஆளானதுடன் காயங்களிற்காக 125தையல்கள் தேவைப்பட்டன. கடித்த நாய் கருணை கொலை செய்யப்பட்டது.
வின்சர், ஒன்ராறியோவில் இச்சம்பவம் நடந்துள்ளது. நாயின் சொந்தகாரரின் விருப்பத்தின் பெயரில் கருணை கொலை செய்யப்பட்டது. வீடொன்றில் இரவு தூக்கத்திற்கு சென்ற சமயத்தில் நடந்துள்ளது. கர்மா ஜாறியெட் என்ற இச்சிறுமி சண்டை பிடித்து கொண்டிருந்த இரண்டு நாய்களிற்குள் அகப்பட்டு கொண்ட போது ஒரு நாய் இவள் பக்கம் திரும்பியதாக விசாரனையிலிருந்து தெரிய வந்துள்ளது.
குறிப்பிட்ட நாய் ஒரு தடைசெய்யப்பட்ட இனம் இல்லை என்றும் விசாரனை தொடங்கப்பட்டதும் தனிமை படுத்தப்பட்டதெனவும் கூறப்பட்டுள்ளது. இரண்டு நாய்களும் சண்டை பிடித்து கொண்டிருந்ததாகவும் அவற்றை விலக்க இடையில் சென்ற சமயம் சிறுமி மீது பாய்ந்த நாய் அவளின் முகத்தில் கடித்ததாகவும் சிறுமி தெரிவித்தாள்.
அடுத்தநாள் இடம்பெற்ற சத்திர சிகிச்சை கிட்டத்தட்ட இரண்டரை மணித்தியாலங்கள் வரை நீடித்தது. முகத்தில் 75 தையல்களும் காலில் 50 தையல்களும் போடப்பட்டன.