ஆளில்லாத வாகனத்தால் மோதப்பட்ட 6-வயது பெண்?

ரொறொன்ரோ வடபகுதி ஆரம்ப பாடசாலை ஒன்றிற்கு அருகாமையில் 6-வயதுடைய பெண் ஆளில்லாத Hyundai SUV வாகனத்தால் மோதப்பட்டு சிக்கலான நிலைமையில் வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்தாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கீல் வீதி மற்றும் வில்சன் அவெனியு அருகில் விக்ரொறி டிரைவ் பகுதியில் பிற்பகல் 3.30-மணியளவில் சம்பவம் நடந்துள்ளது.
பெண்ணின் தந்தை மகளை ஒரு மெசடிஸ்-பென்ஸ் வாகனத்திற்குள் அமர்த்திய சமயம் சம்பவம் நடந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர். Hyundai SUV தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்ததெனவும் வாகனத்தில் எவரும் இருக்கவில்லை எனவும் கியர் இயக்கத்தில் இருந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார். பெண் இருந்த வாகனத்தை நெரித்துள்ளது.
பெண் சிறுவர் வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்டாள். காயங்களின் தன்மை தெரியவரவில்லை. சம்பவத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் புலன் விசாரனையில் ஈடுபட்டுள்ளனர். இயந்திர கோளாறு காரணமாக அமையலாம் எனவும் கருதப்படுகின்றது. இது ஒரு கொடிய விபத்து என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.