News

இத்தாலியில் ரயில் விபத்து: 3 பேர் பலி, 100 பேர் படுகாயம்

இத்தாலியின் மிலன் நகரில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாகியுள்ளனர், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். வடக்கு இத்தாலியில் இன்று காலை 6 மணியளவில் Cremona ரயில் நிலையத்தில் இருந்து Milan’s Garibaldi நிலையத்திற்கு விரைந்த ரயிலின் இரண்டு பெட்டிகள் Pioltello Limito ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இதுவரை மூன்று பேர் பலியாகி உள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்துக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவ பகுதிக்கு விரைந்த மீட்பு குழுவினர் விபத்தில் சிக்கிய பயணிகளை இடர்பாடுகளில் இருந்து மீட்டு வருகின்றனர். ரயில் பெட்டிகள் அதிக சேதத்துடன் நொறுங்கி கிடப்பதால் மீட்பு பணியை முழுவேகத்தில் செய்ய தாமதமாவதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

இத்தாலியில் சமீபத்திய காலத்தில் நிகழ்ந்த கோரமான ரயில் விபத்து இதுவாகும், ஏழு வருடம் முன்பு 2009 ஆம் ஆண்டு மத்திய இத்தாலியில் Viareggio எனும் இடம் அருகே பெட்ரோலிய பொருட்களை ஏற்றி சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட விபத்தில் 32 பேர் பலியாகினர், அடுத்து 2016 ஆம் ஆண்டு தெற்கு இத்தாலியில் Puglia என்ற இடத்தில் இரு ரயில்கள் ஒரே பாதையில் வந்ததால் இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதி 23 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top