News

இன்னும் 6 மாதங்கள் தான்… அமெரிக்காவுக்கு சர்வ நாசம்: எச்சரித்த வடகொரியா

இன்னும் ஆறு மாதங்களில் அமெரிக்காவை புரட்டிப்போடும் அளவுக்கு வடகொரியா அணுஆயுத தாக்குதலை முன்னெடுக்கும் வகையில் வளர்ச்சி அடையும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவுக்கு எதிராக அணுஆயுத தாக்குதலை முன்னெடுக்கும் வகையில் பொத்தானை தாம் தயார் நிலையில் வைத்துள்ளதாக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ள நிலையில், அரசியல் மற்றும் அவரலாற்று நிபுணர் ஒருவர் வெளியிட்டுள்ள கருத்து மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இன்னும் 3 அல்லது ஆறு மாதங்களுக்குள் வடகொரிய உலகின் எந்த மூலைக்கும் சென்று தாக்கும் வகையில் அணுஆயுத வல்லமை பெற்றுவிடும் எனவும், அதனால் அமெரிக்காவுக்கே மேலதிக அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் குறித்த நிபுணர் எச்சரித்துள்ளார். புத்தாண்டு செய்தியில் கூறியது போன்று கிம்மிடம் தற்போது அணுஆயுத தாக்குதலை முன்னெடுக்கும் பொத்தான் இல்லை எனவும், ஆனால் அது கூடிய விரைவில் சாத்தியமாகும் வகையில் வடகொரியா முனைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்காந்த அலைகளால் ஆன தாக்குதலை கிம் அரசு அமெரிக்காவுக்கு எதிராக தொடுக்கலாம் என்ற அச்சம் தமக்கு இருப்பதாக கூறும் அவர், இது தற்போதைய நிலையில் அணுஆயுதங்களால் இழைக்கப்படும் சேதங்களைவிடவும் பலமடங்கு இழப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் கிம்மின் அச்சுறுத்தலுக்கு பதிலடி தந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தங்களது நாடு எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதையே வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடகொரியாவுக்கு எதிரான பொருளாதார தடைவிதிக்க ஐக்கிய நாடுகள் மன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 15-0 என்ற எண்ணிக்கையில் வெற்றிபெற்றமை, உலக நாடுகள் அனைத்தும் தற்போதைய சூழலில் மரணத்தை அல்ல அமைதியையே விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top