Canada

இருவரை கொலை செய்த குற்றவாளியின் உடமைகள் சோதனையில் வெளிப்படும் தகவல்கள்!

காணாமல் போன இரு மனிதர்கள் கொலை செய்யபட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பெயரில் 66வயதுடைய புறூஸ் மக்ஆர்தர் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆனால் இருவரது உடல்களும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. ரொறொன்ரோ பொலிசார் ரொறொன்ரோ மற்றும் மடொக், ஒன்ராறியோவிற்கு அருகாமையில் உள்ள பல பகுதிகளில் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேக நபர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். அன்ட்ரூ கின்ஸ்மன் 49-வயது மற்றும் செலிம் இசென் 44-வயது ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்ட இருவருமாவார்.

கின்ஸ்மன் கடந்த யூன் மாதம் கடைசியாக காணப்பட்டார். எசன் ஏப்ரல் நடுப்பகுதியில் காணாமல் போய் விட்டார். இருவர் மட்டுமன்றி மேலும் பலரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்புவதாக பொலிசார் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

இதே நேரம் தோன்கிளிவ் பார்க் சுற்றுவட்டாரம், ரொறொன்ரோவில் மக்ஆர்தரின் அப்பார்ட்மென்டை ஆராய்ந்த போது வேறு நான்கு மனிதர்களின் சாட்சியங்களை பொலிசார் கண்டு பிடித்ததாக ஆதாரம் ஒன்று தெரிவிக்கின்றது. சனிக்கிழமை ரொறொன்ரோ லீசைட் பகுதியில் அமைந்துள்ள இடமொன்றில் புலன்விசாரனையாளர்கள் வெள்ளை நிற பாதுகாப்பு கவுன்கள் அணிந்து கையுறைகள் மற்றும் காலணிகளும் அணிந்து வீடொன்றின் வாகன பாதையில் கராஜிற்குள் இருந்து உள்ளடக்கங்களை இழுப்பது போன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வீட்டில் மக்ஆர்தரை பல தடவைகள் கண்டதாக அயலவர்கள் சிபி24செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர். பல வருடங்களாக இவ்வாறு நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட வீடு ஒரு நட்பான வயோதிப தம்பதியருக்கு சொந்தமானதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்காபுரோ சுற்று வட்டாரங்களிலும் இரண்டு-நிலை செங்கல் வீடு ஒன்றிற்கும் பொலிசார் சென்றுள்ளனர்.

கடந்த காலங்களில் மக் ஆர்தர் தோட்டங்களில் வேலை செய்ததை அயலவர்கள் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை பொலிஸ் நாய்களுடன் மக்டொக், ஒன்ராறியோவிற்கு அருகில் பனி நிறைந்த கிராம பகுதியில் சோதனையிட்டனர். இப்பகுதி பலத்த பொலிஸ் நடமாட்டம் நிறைந்து காணப்பட்டது..இப்பகுதி மக்ஆர்தரின் நண்பர் ஒருவருக்கு சொந்தமானதென பதிவுகள் தெரிவிக்கின்றன. மக்டொக் ரொறொன்விலிருந்து 200கிலோ மீற்றர்கள் வடகிழக்கில் அமைந்துள்ளது.

வியாழக்கிழமை மக்ஆர்தர் தனது வாகனங்களில் ஒன்றை அகற்ற சிதைவு பகுதி ஒன்றிற்கு செல்கையில் தொடரந்து சென்ற பொலிசார் அவரை கைது செய்தனர். வாகனம் அழிக்கப்படுவதை பொலிசார் தடுத்ததுடன் உள்ளே இரத்தத்தையும் கண்டுள்ளனர். வாகனத்தில் கண்டுபிடித்த சாட்சியங்களை வைத்து மக்ஆர்தரின் அப்பார்ட்மென்;டை சோதனையிட வாரன்டை பெற்றனர் பொலிசார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top