News

இறந்து இரண்டு மாதங்களுக்கு பின்னர் சிரித்துக்கொண்டே எழுந்த துறவி

தாய்லாந்தில் இறந்த மதகுரு ஒருவரின் உடலை தோண்டி எடுத்தபோது, அவரின் உடல் அழுகாத நிலையில் மேலும், சிரித்துக்கொண்டே இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பிறப்பில் கம்போடியாவை சேர்ந்த Luang Phor Pian என்பவர் தாய்லாந்தில் உள்ள கோவிலில் புத்தகுருவாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு வயது 92. இவர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பாங்காங் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

தற்போது அவர் இறந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு அவருக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு ஆடைகள் அணிவிக்கப்பட்டு மீண்டும் சவப்பெட்டிக்குள் வைத்து புதைக்கப்பட்டது.

ஆனால், இதில் என்ன ஆச்சரியமெனில் இறந்தபின்னரும் சிரித்தபடியே இவர் இருந்துள்ளார். மேலும் அவரது உடல் அழுகாத நிலையில் இருந்ததுள்ளது. இதனால் இந்த மதகுரு குறித்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top