News

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரித்தானிய இளவரசரிடம் கோரிக்கை!

இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு பிரித்தானிய இளவரசர் எட்வர்ட்டிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இளவரசர் எட்வர்ட் அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் செய்யவுள்ளார். இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்வதற்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார். இலங்கைக்குச் செல்லும் இளவரசரிடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். போர்க் காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டும். அதனால் இளவரசர் இலங்கை அரசுக்கு இந்த விடயத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top