இலங்கையில் அதிசய பாம்பு! வியப்பில் மக்கள்

இலங்கையில் அதிசயமிக்க பாம்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. தோப்பூர் நீணாக்கேனிப் பிரதேசத்தில் அபூர்வமான நாகப்பாம்பு ஒன்று ஊர் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் அச்சம் காரணமாக அதனை அடித்து கொன்றுள்ளனர். இந்த பாம்பு விசித்திரம் நிறைந்து காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் நீளமான நாகப்பாம்பு மனித முகத்தை கொண்டுள்ளமை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான பாம்பு இனம் இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகின்றன.