News

இலங்கையில் ஆட்கடத்தலை தடுக்க அமெரிக்கா நிதியுதவி

இலங்கையில் ஆட்கடத்தலை தடுப்பதற்காக அமெரிக்கா எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கென 183 மில்லியனுக்கும் அதிக ரூபாவை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது.

இந்நிதியை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்குப் பொறுப்பான பணியகம் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவு அலுவலகங்களுக்கு கையளிக்கவுள்ளது.

இம்முயற்சியை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெஷாப் பாராட்டியுள்ளதுடன்,” நவீன அடிமைத்தனம், பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்காக சர்வதேச பங்குதாரர்களுடன் இணைந்து செயற்படக்கூடிய வல்லமை அமெரிக்காவிடம் உள்ளது. இதனடிப்படையில் ஆட்கடத்தலை தடுப்பதற்காக நாம் இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.” என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, “ஆட்கடத்தலை தடுப்பதற்கு இது மிகச் சிறந்த தருணம்.” என சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான வதிவிடப் பணிப்பாளர் சிம்ரின் சிங் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top