உணவு விடுதியில் பாரிய வெடி விபத்து: இடிந்து விழுந்த கட்டிடத்தில் சிக்கிய மக்கள்.. 20 பேர் காயம்

பெல்ஜியத்தில் உணவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் அருகருகே இருந்த இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. இதில் 20 பேர் காயமடைந்துள்ளனர். பலகலைக்கழகத்தின் அருகாமையில் குறித்த வெடிவிபத்து நடந்துள்ளது.
இதன் காரணம் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், பயங்கரவாத தொடர்புக்கு வாய்ப்பில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் 4 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இடிந்து விழுந்த கட்டிடத்தின் ஒருபகுதியானது உணவு விடுதியாக செயல்பட்டு வருகின்றது. முதற்கட்ட விசாரணையில் எரிவாயுவால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. மீட்பு குழுவினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டில் இருந்தே பெல்ஜியத்தில் உச்சகட்ட எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.