உயர்தர பாடசாலை கத்திகுத்து சம்பவத்தில் பெண் மாணவி, ஆசிரியர் காயம்!

ரொறொன்ரோ-பிக்கரிங் உயர்தர பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கத்திகுத்து சம்பவத்தில் இரு பெண்கள் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் புதன்கிழமை நடந்துள்ளது. பிக்கரிங்கில் உள்ள பைன் றிட்ஜ் இரண்டாம் நிலை பாடசாலைக்கு பிற்பகல் 1.15மணி அளவில் டர்ஹாம் பிரதேச பொலிசார் அழைக்கப்பட்டனர்.
பொலிசார் சென்ற போது பாடசாலை நுழைவாயிலில் 16வயது பெண் குத்து காயங்களால் வருந்திய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
உயிராபத்தான காயங்கள் ஏற்படவில்லை. சம்பவத்தில் தலையிட முயன்ற பெண் ஆசிரியர் ஒருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இவருக்கு சம்பவ இடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக 16-வயது பெண் காவலில் வைக்கப்பட்டுள்ளார். குத்தியதற்கான நோக்கம் தெரியவில்லை.