Canada

உறைபனி மழை எச்சரிக்கை!

வெப்பமாக இருக்கும் இந்த வார இறுதிநாட்கள் மீண்டும் நிலையான குளிர் காலநிலையின் தன்மைக்கு திரும்புகின்றது. ரொறொன்ரோ பெரும்பாகம் ஒரு உறைபனி அபாயத்தை எதிர்நோக்குவதால் திங்கள்கிழமை போக்குவரத்து சிக்கல்கள் ஏற்படலாம். கனடா சுற்றுசூழல் சனிக்கிழமை மாலை ஒரு விசேட வானிலை அறிக்கையை வெளியிட்டதுடன் திங்கள்கிழமை உறைபனி மழை ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் தென்படுவதாகவும் எச்சரித்துள்ளனர்.

கிழக்குதிசை நோக்கிய காற்றானது குளிர்ந்த காற்றை கொண்டு வருவதால் வெப்பநிலையை உறைபனி நிலைக்கு தள்ளுமாகையால் நாளின் இரண்டாவது அரைப்பகுதியில் உறைபனி மழையை ஏற்படுத்தலாம் என வானிலை ஏஜன்சி தெரிவித்துள்ளது. ரொறொன்ரோவின் வடபகுதிகளான ஓக் றிட்ஜஸ் மொரயின் பகுதி நகர்ப்பகுதியை விட பெரும்பாலும் பாதிக்கப்படலாம் ஆனால் திங்கள்கிழமை மாலை போக்குவரத்து பனி வீதிகளால் பாதிக்கப்படலாம் என சுற்று சூழல் கனடா தெரிவிக்கின்றது.

செவ்வாய்கிழமை வெப்பநிலை மெதுவாக 5 C உயர்வடையும். மழை அல்லது பனி பொழிவிற்கான சாத்தியக்கூறுகள் 40சதவிகிதம் தென்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீடிக்கும் வரை அனுபவித்து கொள்ளலாம். வாரத்தின் பின் அரை பகுதியில்- புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை -5 C ஆக இருந்து வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுகிழமை 1 C, 2 C ஆக உயரும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top