உலகில்மிக பிரபல்யமான பிராண்டான IKEA-நிறுவனர் மரணம்!

உலக நாடுகள் பலவற்றில் பிரபல்யமாக விளங்கும் அனைத்து தளபாட விற்பனை நிலையமான IKEA வை நிறுவிய இன்ங்வர் காம்ராட் தனது 91வது வயதில் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகாலத்தில் சுவீடனில் ஒரு சிறிய-அளவிலான அஞ்சல் ஆர்டர் வணிகமாக ஆரம்பித்த இந்த வர்த்தகம் காலப்போக்கில் உலகளாவிய மரச்சாமான்களின் பேரரசாக மாறியது.
சுவிடனின் தென்பகுதியில் இவரது வீடு அமைந்துள்ள சாம்லான்ட் என்ற இடத்தில் காலமானார் என IKEA-வின் சுவிடன் அலகு சனிக்கிழமை தெரிவித்துள்ளது. உலகில் மிக அங்கீகாரம் பெற்ற பிரபல்யமான பிராண்டாக இந்நிறுவனம்விளங்குகின்றது. இவரை இவரது குடும்பத்தினர் மற்றும் உலகம் பூராகவும் உள்ள IKEA ஊழியர்கள் அனைவராலும் இவரது இழப்பு நினைவு கூரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காம்பிராட் தனது 17-வது வயதில் இக்கம்பனியை குடும்ப பண்ணையில் ஆரம்பித்தார். இவரது கம்பனியின் பெயர் இவரது சொந்த முதலெழுத்துக்கள் மற்றும் குடும்ப பண்ணையின்- Elmtaryd-அத்துடன் முதல் எழுத்துக்கள் திருச்சபை அமைந்திருக்கும் இடமான Agunnaryd-ன் முதல் எழுத்துக்களை கொண்டு IKEA என பெயரிடப்பட்டது.
1926 மார்ச் 30ல் பிறந்தார்.ஆரம்பத்தில் தனது சைக்கிளில் அயலவர்களிற்கு தீப்பெட்டிகளை விற்றார். 1950ல் படிப்படியாக தளபாடங்களை அறிமுகப்படுத்தினார். தளபாடங்களை பொருத்துவதால் வாடிக்கையாளர்களிற்கு விலைகளை குறைத்தார். தொடர்ந்து வீட்டு தளபாடங்களை மலிவு விலையில் உலகம் முழுவதும் கடைகளில் விற்பனை செய்ய ஆரம்பித்தார்.