Canada

எங்களை மன்னித்து விடுங்கள்: மன்னிப்பு கேட்ட இஸ்லாமிய குடும்பம்

கனடாவில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது இஸ்லாமிய மாணவி ஒருவரின் ஹிஜாப்பை மர்ம நபர் வெட்டி எறிந்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கனடாவின் Toronto நகரில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த Khawlah Noman என்ற சிறுமியின் ஹிஜாப்பே வெட்டி எறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் Justin Trudeau உட்பட கனடா நாட்டு அரசியல்வாதிகள் இந்த நிகழ்வைக் கண்டித்திருந்தனர். இதை ஒரு வெறுப்புக் குற்றமாகப் பதிவு செய்த பொலிசார், குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வந்தனர். பின்னர் அத்தகைய ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்தச்சிறுமியின் குடும்பத்தினர் நடந்த சம்பவங்களுக்காக மன்னிப்புக் கோரியுள்ளனர். “கடந்த பல நாட்களாக எங்களால் ஏற்பட்ட வேதனை மற்றும் கோபத்திற்காக மிகவும் வருந்துகிறோம்” என்று தெரிவித்துள்ள அந்தப் பெண்ணின் கும்பத்தினர்,

“இந்த விஷயம் எங்கள் குடும்பத்திற்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தது, இப்படிப்பட்ட நேரத்தில் எங்களுக்கு ஆதரவாக இருந்த ஒவ்வொருவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம், கனடா நாட்டின் ஒவ்வொரு பிரஜையிடமும் மனதார மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்” என்றும் கூறியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top