எஞ்சியுள்ள சியர்ஸ் கனடா கடைகள் இன்று மூடப்படுகின்றன

கனடாவின் நீண்ட கால சில்லறை விற்பனை களஞ்சியம் கடந்த வருடம் நொடிப்பு நிலையை அறிவித்தது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வேலை பணி நீக்கத்திற்கு ஆளானார்கள். அக்டோபரில் மலிவு விற்பனை ஆரம்பமானது.
கனடா பூராகவும் ஒரு சில கடைகள் மட்டும் எஞ்சியிருக்க மற்றவை அனைத்தும் மூடப்பட்டன. சியர்ஸ் தொடரின் மூடல் பல சர்ச்சகைகளை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது. இவர்களது ஓய்வூதிய திட்டத்தில் 260-மில்லியன் டொலர்களிற்கும் மேலான தொகை பற்றாக்குறை ஏற்பட்டது.