என்டிபி தலைவர் சிங்கின் திருமணம் கனடாவில் தனிப்பட்ட கொண்டாட்டம் .

புதிதாக நிச்சயம் செய்து கொண்ட கூட்டாட்சி என்டிபி தலைவர் சிங்க் தனது பிரமாண்டமான திருமண கொண்டாட்டத்தை வீட்டிற்கு அருகாமையில் நடாத்திவிட்டு தனியார் விழா மற்றும் தேனிலவை மெக்சிக்கோவில் நடாத்த உள்ளார்.
முதலாவது பஞ்சாபி பாரம்பரிய வழக்கப்படி பிப்ரவரி 4ல் பிரம்ரன் ஒன்ராறியோவில் நடை பெறுகின்றது. நண்பர்கள், குடும்பத்தினர், அயலவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் சூழ இந்த வைபவம் நடை பெறும். இதனை தொடர்ந்து பிப்ரவரி 19 தம்பதிகள் மெக்சிக்கோ சென்று தங்கள் தேனிலவை ஆரம்பிக்க முன்னர் தனிப்பட்ட விழாவொன்றை நடாத்த உள்ளனர். சிங்கும் கவுரும் சென்ற பின்னர் கீழ்சபை அமர்வு இடம் பெறாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.