ஐரோப்பிய நாட்டுக்குள் நுழைந்த பெருந்தொகை இலங்கையர்கள் கைது .

ஐரோப்பிய நாட்டுக்குள் நுழைந்த இலங்கையர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். துருக்கி நாட்டுக்குள் அனுமதியின்றி நுழைய முயற்சித்த 1200க்கும் அதிகமானோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குள் இலங்கையர்களும் பலர் உள்ளதாக அந்த நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கிரிஸ் மற்றும் பல்கேரியா எல்லைக்கு அருகில் வைத்து பெருந்தொகை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுமதியின்றி துருக்கி நாட்டுக்குள் நுழைய முயற்சித்தவர்களில் இலங்கை, பங்களாதேஷ், பலஸ்தீன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.