ஒன்ராறியோவின் குறைந்த பட்ச ஊதிய உயர்வு குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை!

செவ்வாய்கிழமையிலிருந்து குறைந்த பட்ச ஊதிய பணியாளர்கள் தங்களிற்கு மணித்தியாலத்திற்கு 14-டொலர்கள் என்பதை அதிகார பூர்வமாக எதிர்கொள்வர் என தெரிவிக்கப்படுகின்றது. அனைத்து குறைந்த பட்ச ஊழியர்களும் தற்போது மணித்தியாலத்திற்கு 11.60டொலர்களிலிருந்து 14-டொலர்களை பெற உரிமை பெறுகின்றனர். இந்த உயர்வு அடுத்த வருடம் மேலும் அதிகரிக்கும்.2019 ஜனவரியில் மணித்தியாலத்திற்கு 15-டொலர்களாகும்.
புதிய குறைந்த பட்ச ஊதியத்திற்கு மேலாக பெறுபவர்களிற்து இந்த உயர்வு உடனடி ஏற்றமாக அமையாது. மது பான சர்வர்கள், வேட்டை மற்றும் மீன் பிடி வழிகாட்டிகள், வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் மற்றும் 18-வயதிற்கு குறைந்த மாணவர்கள் தங்களது குறைந்த பட்ச ஊதியம் உயர்வதை காண்பர் ஆனால் 14-டொலர்கள் அல்ல. வயது வராத மாணவர்கள் டொலர்கள் 10.90லிருந்து டொலர்கள் 13.15ஆகும். மதுபான சர்வர்கள்:டொலர்கள் 10.10லிருந்து டொலர்கள் 12.20. வேட்டை மற்றும் மீன் பிடி வழிகாட்டிகள்-வேலை செய்யும் மணித்தியாலங்களை கருத்தில் கொண்டு டொலர்கள் 58அல்லது 116லிருந்து டொலர்கள் 70 அல்லது டொலர்கள் 140. வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள் டொலர்கள் 12.80லிருந்து டொலர்கள் 15.40 பெறுவர்.
இந்த பணியில் இருக்கும் தனிப்பட்டவர்கள் 2019 ஜனவரி 1ல் மற்றுமொரு உயர்வை பெறுவர். மற்றய மாற்றங்கள்: நிறுவனம் ஒன்றில் ஐந்து வருடங்கள் பணிபுரிபவர்கள் மூன்று வாரங்கள் ஊதியத்துடனான விடுமுறை பெறுவர். எந்த காரணத்தினாலேனும் இறக்கும் பிள்ளைக்கு 104-வாரங்கள் வரையிலான விடுமுறை வழங்கப்படும். குற்றம் சம்பந்தமாக காணாமல் போகும் பிள்ளை ஒன்றிற்கு 104-வாரங்கள் வரையிலான விடுப்பு வழங்கப்படும்
50-ற்கும் குறைவான ஊழியர்கள் உள்ள கம்பனியில் தனிப்பட்ட அவசர சேவை நீடிப்பு. பாலியல் அல்லது வீட்டு வன்முறை சம்பந்தமான அச்சுறுத்தல்களிற்கு ஆளாகும் ஊழியர்களிற்கு தனிப்பட்ட அவசர நிலை விடுப்பு தற்போது அனுமதிக்கப்படும். தனிப்பட்ட அவசர விடுப்பிற்கு ஊழியர்களிடம் சுகயீன குறிப்பு கேட்க பட மாட்டாது. இரண்டு நாட்கள் ஊதியத்துடன் கூடிய 10 தனிப்பட்ட அவசர விடுப்பிற்கு ஊழியர்கள் உரிமை உடையவர்களாகின்றனர்.
குடும்ப மருத்துவ விடுப்பு காலம் 52-வாரங்களிற்கு-27வாரங்கள் அதிகரித்து-உயர்த்தப்பட்டுள்ளது. சிறு தொழில் வியாபாரங்களை புதிய ஊதிய அதிகரிப்பு கடடிமானதாக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. பெரும்பாலானவர்கள் ஆட்குறைப்பு நேர குறைப்பு அல்லது விலை அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கின்றனர். மாகாணத்தில் கிட்டத்தட்ட 50,000 வேலை இழப்புக்கள் புதிய குறைந்த பட்ச ஊதிய நடைமுறையினால் ஏற்படலாம் என ஒன்ராறியோவின் நிதி பொறுப்பு அலுவலகம்-மாகாணத்தின் சுயாதீன கண்காணிப்பு-மதிப்பீடு செய்துள்ளதாக அறியப்படுகின்றது.