ஒரே நாளில் 16 தடவை புத்தாண்டு கொண்டாடும் 6 விண்வெளி வீரர்கள்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பணியில் இருக்கும் 6 விண்வெளி வீரர்கள் இன்று ஒரே நாளில் 16 முறை புத்தாண்டு தினத்தை கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. அங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு ரஷியா, அமெரிக்கா மற்றும் ஜப்பானை சேர்ந்த 6 வீரர்கள் 2 வாரங்களுக்கு முன்பு சென்றனர். கடந்த 2 வார விண்வெளி பயணத்திற்கு பின்பு இவர்களது உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி அவர்கள் விண்வெளியில் உடற்பயிற்சி செய்வார்கள். இதன்மூலம் விண்வெளியில் எப்படி எல்லாம் உடல் மாற்றம் ஏற்படுகிறது என்பதை கண்டுபிடிக்க முடியும்.
மேலும் இந்த 6 விண்வெளி வீரர்களும் இன்று காலையில் இருந்து பூமியை முன்னும் பின்னுமாக 90 நிமிடத்துக்கு ஒருமுறை சுற்றுவார்கள். அதன் காரணமாக இன்றில் இருந்து நாளை வரை இவர்களுக்கு 16 தடவை சூரிய உதயம் ஏற்படும்.
எனவே கணக்குபடி அவர்களுக்கு இன்று 16 தடவை புத்தாண்டு பிறக்கும். உலகிலேயே இதுபோன்ற சாதனையை இதுவரை யாரும் நிகழ்த்தவில்லை.