ஓன்ராறியோ பூராகவும் புதிய பாடசாலைகள் சிறுவர் பராமரிப்பு வசதிகள்!

2018ல் ஒன்ராறியோ புதிய பாடசாலைகள் மற்றும் சிறுவர்பராமரிப்பு வசதிகளை ஏற்படுத்த 700-மில்லியன் டொலர்களை முதலீடு செய்வதாக திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இந்நிதி 39 புத்தம் புதிய பாடசாலைகள், 40 பாடசாலைகள் மறுசீரமைப்பு அத்துடன் 2,700 புதிய உரிமம் பெற்ற நான்கு வயது வரையிலான சிறுவர் பராமரிப்பு வசதிகளிற்கும் பகிரப்படும்.
அடுத்த ஐந்து வருடகாலத்தில் பாடசாலைகள் மற்றும் மற்றய பொது இடங்களில் 45,000 புதிய உரிமம்பெற்ற இடங்களை உருவாக்க 1.6பில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.