News

கசப்பான ஏமாற்றத்தில் தமிழர்கள் – சம்பந்தன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமது இணை அனுசரணையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பான தமது கடப்பாடுகளை இலங்கை அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை. இதனால், தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.தி ஹிந்து ஆங்கில ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமது இணை அனுசரணையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பான தமது கடப்பாடுகளை இலங்கை அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை. இதனால், தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.தி ஹிந்து ஆங்கில ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு சாதகமான அரசியல் தீர்வொன்றை காண்பதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு அரசியலமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்காக நியமிக்கப்பட்ட பிரதமர் தலைமையிலான 21 பேர் அடங்கிய வழிநடத்தல் தொடர்ச்சியான சந்திப்புக்களை மேற்கொண்டு தமது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அது நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு உட்படுத்துப்படுகிறது. இந்த நிலையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர் (பெப்ரவரியில்) அரசியலமைப்பு பணிகள் மிக விரைவாக முன்னெடுக்கப்படும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

சில அரசியல் கட்சிகளின் சில நிலைப்பாடுகள் காரணமாக இந்தப் பணிகள் ஓரளவு தாமதமாகி விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்பான கேள்விகளும் உள்ளன. இவை தொடர்பில், எதுவும் செய்யப்படவில்லை என நான் கூறவில்லை. ஆனால், இன்னும் அதிகமாக செய்யப்பட முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 40 முதல் 50 வீதமானோர் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கேள்விகளுக்கு சுமார் 20ஆயிரம் முறைப்பாடுகள் உள்ளன. இது எண்ணிக்கை அடிப்படையில் மிகப்பெரியதாகும். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் குறித்த தகவல்களே அவர்களின் குடும்பங்களின் அடிப்படை தேவையாக உள்ளது. அவர்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? என்பது தொடர்பில் ஒருசில முடிவுகள் தேவை.

அவர்களுக்கு சிலஆறுதல்கள் இருக்க வேண்டும். அவர்கள் யதார்த்தத்துடன் இணங்கக்கூடிய வகையில் அவர்கள் தமது வாழக்கையை முன்கொண்டு செல்ல மறுசீரமைப்பு உதவிகள் அவசியமானதாகும். இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 2015 ஆம் ஆண்டு தமது இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தமது கடப்பாடுகளை இன்னும் நிறைவேற்றவில்லை.

இந்தத் தாமதம் காரணமாக தமிழ் மக்கள் கசப்பான ஏமாற்றமடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top