கஜகஸ்தான்: பஸ் தீபிடித்த விபத்தில் 52 பேர் பலி
மத்திய ஆசிய கண்டத்தில் உள்ள கஜகஸ்தான் நாட்டில் இன்று திடீரென ஓடும் பஸ்சில் தீபிடித்த விபத்தில் 52 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
மத்திய ஆசிய கண்டத்தில் உள்ள கஜகஸ்தான் நாட்டில் உள்ள அக்டோபே மாகாணத்துக்குட்பட்ட நெடுஞ்சாலை வழியாக இன்று திடீரென ஓடும் பஸ்சில் தீபிடித்த விபத்தில் 52 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
ககஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் இரு டிரைவர்கள் உள்பட 57 பேருடன் சென்று கொண்டிருந்த அந்த பஸ்சில் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 10.30 மணியளவில் திடீரென்று தீபிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 52 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.5 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
தொடர்ந்து பேருந்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. பலியானவர்கள் அனைவரும் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பேருந்து தீப்பற்றியதற்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை மட்டுமின்றி பெரும்பாலும் குறித்த நெடுஞ்சாலையானது உஸ்பெகிஸ்தான் அகதிகளால் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது உஸ்பெகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு மற்றும் தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் கசகஸ்தானில் இருந்து செயல்படும் பேருந்து ஒன்று ரஷ்யாவில் இருந்து இயக்கப்படும் ரயில் மீது மோதியதில் 17 பேர் கொல்லப்பட்டனர். குறித்த பேருந்தில் சுமார் 50 பேர் அச்சமயம் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.